"கொல்லைப்புற வழியாக ஆட்சிக்கு வரும் எண்ணம் திமுகவுக்கு துளியும் இல்லை!"- முன்னாள் அமைச்சர் ரகுபதி

மதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது என நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை.
DMK Ex Minister Raghupathy
Published on

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டுக்கு திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

குதிரை பேரத்தில் ஈடுபட்டிருந்தால் கூட்டணி கட்சிகளை தவெகவை ஆதரிக்க சொல்லியிருக்க மாட்டோம்.

நிச்சயமாக நாங்கள் ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்; தேர்தலை சந்தித்துதான் ஆட்சிக்கு வருவோம்.. மக்களை சந்திக்காமல் ஆட்சிக்கு வரவே மாட்டோம்

கொல்லைப்புற வழியாக ஆட்சிக்கு வரும் எண்ணம் எங்களுக்கு துளியும் கிடையாது.

மதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது என நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை.

மதிமுக எம்எல்ஏக்களை முதல்வர் ராஜிநாமா செய்யச் சொன்னதாக வைகோ கூறியதற்கு ஏன் வழக்கு பதியவில்லை?

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com