தவெக தலைவர் விஜயை சந்தித்து டிஐஜி தர்மராஜன் ஆலோசனை

நேரு ஸ்டேடியத்தில் விஜய் பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தவெக தலைவர் விஜயை சந்தித்து டிஐஜி தர்மராஜன் ஆலோசனை
Published on

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதையடுத்து, தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், பாமக ஆகியவற்றின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் விஜய் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே, தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை அமைப்பதற்கு முழு ஆதரவை காங்கிரஸ் அளித்துள்ளது. இதுதொடர்பான கடிதத்தையும் வெளியிட்டுள்ளது. த.வெ.க.வை ஆதரிப்பதாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 5 பேரும் கையெழுத்திட்டுள்ளனர். மதவாத சக்திகளை கூட்டணியில் அனுமதிக்ககூடாது என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.

இந்நிலையில் தவெக தலைவர் விஜயை அவரது இல்லத்தில் டிஐஜி தர்மராஜன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்க உள்ள நிலையில் டிஐஜி தர்மராஜன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

நேரு ஸ்டேடியத்தில் விஜய் பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

விஜயின் அழைப்பின்பேரில் டிஐஜி தர்மராஜன் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com