விஜய்யை பார்க்க 3 கி.மீ தூரம் சாக்கடை கால்வாயில் நீந்தி வந்த த.வெ.க. தொண்டர்?

சாக்கடையில் நீந்தி வந்து விஜய்யை பார்த்த தவெக தொண்டர் என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
விஜய்யை பார்க்க 3 கி.மீ தூரம் சாக்கடை கால்வாயில் நீந்தி வந்த த.வெ.க. தொண்டர்?
Published on

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யும் மாவட்டவாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒருபகுதியாக நேற்று கன்னியாகுமரியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது விஜய் சைக்கிள் எல்லாம் ஓட்டி ரசிகர்களையும், தவெக தொண்டர்களையும் உற்சாகப்படுத்தினார். மேலும் இந்த பரப்புரையில் போது பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார்.

இந்நிலையில் தவெக தொண்டர் ஒருவர் நேற்று விஜய்யை பார்ப்பதற்காக 3 கிலோமீட்டர் தூரம் சாக்கடை கால்வாயில் நீந்தி வந்ததாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர் கால்வாயில் இருந்து மேலே ஏறும் காட்சிள் இடம்பெற்றுள்ளது.

விஜய்யின் பரப்புரை வாகனத்தைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்றதால், கூட்ட நெரிசலில் சிக்காமல் விஜய்யை அருகில் இருந்து பார்ப்பதற்காக அவர் இவ்வாறு வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த வீடியோ எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com