

சென்னையில் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
* அதிமுக நிர்வாகிகளை மிரட்டி வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
* எங்களை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியது சட்டத்திற்கு புறம்பானது.
* திமுகவுடன் இணைந்து இபிஎஸ் ஆட்சி அமைக்க விரும்பியபோது தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
* அதிமுக நிர்வாகிகள் இபிஎஸ் மிரட்டலுக்கு அச்சப்பட வேண்டியதில்லை.
* பொதுக்குழுவை கூட்டுங்கள், பொதுக்குழுவில் பேச தயார்.
* 5ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர் கையெழுத்திட்டால் சிறப்பு பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.
* கையெழுத்திட்டு 30 நாட்களுக்குள் சிறப்பு பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.
* தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை. அதுகுறித்து விவாதிக்கவில்லை.
* அதிமுக தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்து கொண்டிருக்கிறது.
* தோல்வியை ஒத்துக்கொள்ளும் மன பக்குவம் இபிஎஸ்க்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.