

தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தலைமை அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் விழா ரத்தான நிலையில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநரை சந்தித்து நேற்று விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், இன்னும் பெரும்பான்மை கிடைக்காததால் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.