

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள த.வெ.க. ஆட்சி அமைக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும், அவர்களின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தொண்டர்கள் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.
தவெகவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அர்லேகர் அழைக்க வேண்டும் என காங்கிரசார் வலியுறுத்தினர்.