நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி.பஹல்காம் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
Published on

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும், பலர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும்., எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com