தவெகவிடம் மாநிலங்களவை சீட் எதிர்பார்க்கும் காங்கிரஸ்?- முதலமைச்சருடன் நிர்வாகிகள் சந்திப்பு

தவெக-வை இந்தியா கூட்டணிக்கு அழைக்கும் காங்கிரஸ் மேலிடம்.
தவெகவிடம் மாநிலங்களவை சீட் எதிர்பார்க்கும் காங்கிரஸ்?- முதலமைச்சருடன் நிர்வாகிகள் சந்திப்பு
Published on

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சந்தித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்திடம் மாநிலங்களவை சீட் எதிர்பார்க்கும் நிலையில் முதல்வர் விஜயுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்துள்ளனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வருகிற 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

திமுக கூட்டணியில் ஒரு ராஜ்யசபா சீட்டை கேட்டுப் பெற்ற காங்கிரஸ் கிறிஸ்டோபர் திலக் எம்.பி.யாக தேர்வானார்.

இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத்தை இந்தியா கூட்டணிக்கு வருமாறு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்து இந்தியா கூட்டணிக்கு வருமாறு கிரிஷ் சோடங்கர் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com