

அகில் இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளராக இருந்த ஶ்ரீநிதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேசிய இளைஞர் அணிச் செயலாளர் ஸ்ரீநிதி மோகன்தி.மு.க.வில் இணைந்தார்.
அப்போது உடன், துணைப் பொதுச்செயலாளர்கள் கனிமொழி கருணாநிதி, எம்.பி., ஆ.ராசா, எம்பி., எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கரூர் மாவட்டச் செயலாளர் வி.செந்தில்பாலாஜி, எம்.எல்.ஏ., செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் துரை.செந்தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிலையில், திமுக-வில் இணைந்தது தொடர்பாக ஶ்ரீநிதி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர்,"காங்கிரசில் நிலவும் உட்கட்சி பூசல்கள் காரணமாக தொகுதி மக்களுக்கு எந்த பணியையும் சுதந்திரமாக செய்ய முடியவில்லை.
கொங்கு மண்டல பெண் தலைவர்கள் அரசியலில் முன்னேறி வருவதை சில காங்கிரஸ் தலைவரகள் விரும்புவதில்லை" என ஶ்ரீநிதி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.