வாக்குப்பதிவு நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கலாம்- தொழிலக பாதுகாப்பு அதிகாரி தகவல்

விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது புகார் அளிக்க ஏதுவாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் சார்பில் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கலாம்- தொழிலக பாதுகாப்பு அதிகாரி தகவல்
Published on

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. வாக்குப்பதிவு நாளில் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எனவே அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் வருகிற 23-ந்தேதி அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேற்படி விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது புகார் அளிக்க ஏதுவாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் சார்பில் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அலுவலர்களான திருவொற்றியூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் கார்த்திகேயனை 94442 21011, சென்னை இணை இயக்குனர் கமலக்கண்ணனை 98846 75712, சென்னை நிர்வாக அலுவலர் சூரியாவை 98844 70526, காஞ்சீபுரம் துணை இயக்குனர் மணிசங்கரை 99404 68249 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தகவலை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com