த.வெ.க பெண் நிர்வாகிகள் குறித்து ஆபாசமாக பேசியதாக புகார்.. பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு

விஜய் கண்டனம் தெரிவித்திருந்தார்.
த.வெ.க பெண் நிர்வாகிகள் குறித்து ஆபாசமாக பேசியதாக புகார்.. பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு
Published on

முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாமின் உதவியாளராக இருந்தவர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி.

அப்துல் கலாம் விஷன் இந்தியா மூமென்ட் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தவெக பெண் நிர்வாகிகளுக்கு எதிராக ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்ததாக பொன்ராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

தவெக தலைவர் விஜய் அந்த சமயத்தில் அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில் பொன்ராஜ் மீது இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடலூர் தவெக எம்எல்ஏ ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் கடலூர் மாவட்டம் புதுநகர் காவல் நிலையத்தில் பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவிலும் மற்றொரு வழக்கு பொன்ராஜ் மீது பதியப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com