தங்கக் காசுகளை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது புகார்

கடந்த 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் வரை 38.6 கிலோ தங்கக் காசுகளை சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் வாங்கியுள்ளனர்மோசடி வழக்குகளில் சிக்கியதால் கணேஷ் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டனர்
தங்கக் காசுகளை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது புகார்
Published on

சென்னை தியாகராயர் நகரில் பிரபல நகைக் கடையில் 28.5 கிலோ தங்கக் காசுகளை வாங்கிவிட்டு ஏமாற்றியாக கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் மீது நகைக் கடையின் மேலாளர் சந்தோஷ்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், "கடந்த 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் வரை 38.6 கிலோ தங்கக் காசுகளை சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் வாங்கியுள்ளனர். 9.47 கிலோ தங்கக் காசுக்கு மட்டும் பணம் கொடுத்த சகோதரர்கள் மீதமுள்ள 28.5 கிலோ தங்கக் காசுக்கு பணம் தராமல் ஏமாற்றியதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.600 கோடி மோசடி செய்ததாக சகோதரர்கள் கணேஷ் மீது சுவாமிநாதன் மீது வழக்குகள் உள்ளன. மோசடி வழக்குகளில் சிக்கியதால் கணேஷ் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

நிதி நிறுவனம் நடத்தி சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கியதால் இவர்கள் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படுகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com