

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4 நடைபெற உள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களை சந்தித்து இன்று பிற்பகலில் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பனையூரில் நடைபெற்ற வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தல் த.வெ.க தலைவர் விஜய் அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
விஜய் மேலும் கூறியதாவது:-
மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கைபோது கவனமாக இருங்கள்.
நாம் எல்லோரும் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. வெற்றி பெற்றுவிட்டு வேறு எங்கும் சென்று விடாதீர்கள், நேராக பனையூர் வாருங்கள்.
நேராக பனையூர் வாருங்கள் உங்களுக்காக நான் இங்கு காத்திருப்பேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.