

சென்னை வள்ளுவர் கோட்டம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து பாக்யராஜ் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் உடலுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை மதியம் பெசன்ட் நகர் மின்மயானத்தில் பாக்யராஜ் உடல் தகனம் செய்யப்படுகிறது.
முன்னதாக, பாக்யராஜ் மறைந்த செய்தி குறித்து அறிந்த உடன் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். திரைத்துறையில் கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.