விஜய் மாமாவின் குட்டி நண்பா நண்பிகளுக்கு நன்றி- முதலமைச்சர் விஜய் உருக்கம்

தமிழக வெற்றிக் கழக தோழர்களே உண்மையிலேயே சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் இல்லையென்றால் எதுவுமே இல்லை.
விஜய் மாமாவின் குட்டி நண்பா நண்பிகளுக்கு நன்றி- முதலமைச்சர் விஜய் உருக்கம்
Published on

முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-

இப்படி ஒரு சூழலை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விஜய் மாமாவின் குட்டி நண்பா, நண்பிகளுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லணும். அவர்களால்தான் இது நடந்திருக்கிறது. உங்களுக்கு எப்படி நன்றிக்கடன் செய்யணும், உங்களுக்காக உங்கள் எதிர் காலத்தை மனதில் வைத்துக் கொண்டு எல்லா நல்ல விடியல்களையும் உங்களுக்காக இந்த விஜய் மாமா செய்து கொடுப்பான். நம்பிக்கையாக இருங்கள்.

இன்னொருத்தருக்கும் நான் முக்கியமாக நன்றி தெரிவிக்கணும். உங்களை எப்படி நான் மறப்பேன். நீங்கள் தான் எனது உயிராச்சே. தமிழக வெற்றிக் கழக தோழர்களே உண்மையிலேயே சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் இல்லையென்றால் எதுவுமே இல்லை.

என்னுடைய கழக தோழர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் வாக்குச்சாவடி முகவர்களுக்கும், மைடியர் விர்ச்சுவல் வாரியர்ஸ் உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள். வாங்க எல்லோருமா சேர்ந்து ஒரு புதிய அரசை கொடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com