எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை- முதலமைச்சர் விஜய்

த.வெ.க. தொண்டர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். வாருங்கள் புதிய அரசை நடத்திக்காட்டுவோம்.
எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை- முதலமைச்சர் விஜய்
Published on

சென்னை:

தமிழ்நாட்டின் முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-

* இது புதிய தொடக்கம், சமூக நீதிக்கான புதிய அத்தியாயம் தொடங்கியது.

* எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள், அனைத்தையும் சரி செய்வேன், அதற்கு கொஞ்சம் அவகாசம் தேவை.

* 100 சதவீதம் நீங்கள் என்னை நம்பலாம்.

* எங்கள் அரசாங்கத்தில் இணை, துணை என யாரும் இல்லை ஒரே Power Center நான் மட்டு தான்.

* நாம பதவிக்கு வந்துவிட்டோம், எது வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்திருந்தால் இப்போதே அவர்கள் மனதில் இருந்து அதனை அழித்து விடலாம்.

* இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவரின் முகம் தான் இந்த விஜயின் முகம்.

* முகத்தை மூடிக்கொண்டு யாரையும் சந்திக்க மாட்டேன்.

* என் வலி, வேதனைகளை தொண்டர்களும் அனுபவித்தனர்.

* மக்கள் பணத்தை தொடமாட்டேன்.

* த.வெ.க. தொண்டர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். வாருங்கள் புதிய அரசை நடத்திக்காட்டுவோம்.

* நல்லது நடக்கும், நம்பிக்கையாக இருங்கள், மீண்டும் சந்திப்போம்... இல்லை இனி மீண்டும் மீண்டும் சந்திப்போம் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com