

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார்.
சட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் கருப்பையா வாழ்த்து தெரிவித்தார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றதற்கான பதிவேட்டில் விஜய் கையெழுத்திட்டார்.
அவரை தொடர்ந்து அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து திமுக, அதிமுக அமைச்சர்கள் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் சட்டசபை நிகழ்வுகள் முடிந்த பின்னர் முதலமைச்சர் விஜய் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிற்பகல் 2.30 மணிக்கு சந்திக்க உள்ளார். மரியாதை நிமித்தமாக விஜய் அவரை சந்திக்கிறார். அதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் அவர் சந்திக்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் விஜய் நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்திக்க உள்ளார்.