IUML தலைவரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் முதலமைச்சர் விஜய்

சத்தியமூர்த்தி பவனுக்கும், கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்துக்கும் முதலமைச்சர் விஜய் செல்கிறார்.
IUML தலைவரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் முதலமைச்சர் விஜய்
Published on

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து நேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

முதலமைச்சர் விஜய், அரசியல் தலைவர்களை சந்தித்த வாழ்த்து பெறுவது அரசியல் நாகரிகம் என்று தலைவர்கள் பாராட்டினர்.

இந்த நிலையில், இன்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து பெறுகிறார்.

அந்த வகையில், முதலில் சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்திற்கு முதலமைச்சர் விஜய் சென்றார். அவரை அலுவலக வாயில் முன்பு வந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் அழைத்து சென்றனர். அதனை தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொகிதீனிடம் வாழ்த்து பெற்றார்.

இதனை தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனுக்கும், கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்துக்கும் முதலமைச்சர் விஜய் செல்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com