தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை

தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை
Published on

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நேற்று தமிழக அரசின் தற்போதைய நிதிநிலை குறித்தும், நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தயாரிப்பு, திட்டங்களுக்கான செலவீனம், தவெக அளித்துள்ள நிதியுதவி, வாக்குறுதிகள் குறித்த செலவுகள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டார்.

BMW, TVS, Hudson உள்ளிட்ட நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். ஏற்கனவே செய்யப்பட்ட முதலீடுகள், தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் குறித்தும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com