சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற முதலமைச்சர்

முதலமைச்சருக்கு கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் முதலமைச்சர் செல்பி எடுத்துக்கொண்டார்.
சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற முதலமைச்சர்
Published on

விழுப்புரம்:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரோட் ஷோ மூலமாக சாலைகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.

அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகை புரிந்த முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திண்டிவனம் பகுதியில் கோரிக்கை மனுவை பெற்றார்.

இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர் கலெக்டர் அலுவலக வளாகம் எதிரே உள்ள தெய்வானை அம்மாள் கல்லூரி வரை சாலையில் நடந்தே சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் அவர் செல்பி எடுத்து கொண்டார்.

அப்போது முதலமைச்சருக்கு கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாற்றுதிறனாளிகள், பெண்கள், முதியவர்கள், ஆண்கள் என பலதரபட்டவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனுக்களை பெற்றபோது பெண் ஒருவர் செல்பி எடுக்க கேட்டு கொண்டதின் பேரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்ணின் செல்போனை வாங்கி செல்பி எடுத்துக்கொண்டு பெண்ணிடம் செல்போனை கொடுத்தார்.

வரவேற்பு நிகழ்ச்சியில் மாணவர்கள், விவசாயிகள், வக்கீல்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் முதலமைச்சர் வாழ்க என கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

X

Maalai Malar
www.maalaimalar.com