அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். உணவின் தரம் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
Published on

சென்னை:

ஏழை மக்கள் பயன்பெறும் அம்மா உணவகத்தின் செயல்பாடு, உணவின் தரம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு அருந்தியவரிடம் உணவின் தரம் குறித்து அவர் கேட்டறிந்தார்.

அம்மா உணகவகத்தின் உணவு தயாரிப்பு முறைகள், உணவின் தரம் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார். உணவகத்தில் நின்றிருந்த பொதுமக்களிடமும் தகவல்களை கேட்டறிந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com