சூழ்ச்சிகளை முறியடித்து ரூ.5000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின்

இன்று காலை குட் மார்னிங் மட்டுமல்ல, சூப்பர் மார்னிங்காக அமைந்திருக்கிறது.தடைகள், சூழ்ச்சிகளை முறியடித்து ரூ.5000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
சூழ்ச்சிகளை முறியடித்து ரூ.5000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின்
Published on

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9801 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

* மன நிறைவோடு இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன்.

* இன்று காலை குட் மார்னிங் மட்டுமல்ல, சூப்பர் மார்னிங்காக அமைந்திருக்கிறது.

* 1.31 கோடி மகளிருக்கு சிறப்புத்தொகுப்பாக ரூ.5000 வழங்கி விட்டு வந்திருக்கிறேன்.

* வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று நினைக்காமல் அனைவருக்குமான முதலமைச்சராக உள்ளேன்.

* தடைகள், சூழ்ச்சிகளை முறியடித்து ரூ.5000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

* உணர்ச்சிப்பெருக்கின் உச்சத்துடன் இங்கு நான் நின்று கொண்டிருக்கிறேன்.

* மகிழ்ச்சியுடன் பொறுப்புணர்வும் அதிகரித்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com