முதலமைச்சரை சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த கிறிஸ்தவ பேராயர்கள்

தொகுதி மறுவரையறை மசோதாவை தடுத்து நிறுத்திய முதலமைச்சருக்கு கிறிஸ்தவ பேராயர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
முதலமைச்சரை சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த கிறிஸ்தவ பேராயர்கள்
Published on

சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சென்னையின் பல்வேறு சபைகளின் மாவட்ட கிறிஸ்தவ பேராயர்கள் சந்தித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கிறிஸ்தவ பேராயர்கள் தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளித்தனர்.

தொகுதி மறுவரையறை மசோதாவை தடுத்து நிறுத்திய முதலமைச்சருக்கு கிறிஸ்தவ பேராயர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கிறிஸ்தவர் என்பதற்காக மட்டும் எவரையும் ஆதரிக்க வேண்டாம். கட்சிகளின் கொள்கைகளின் அடிப்படையில் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கிறிஸ்தவ பேராயர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க கோரி துண்டு பிரசுரங்களும் விநியோகம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com