பட்டு வேட்டி, சட்டையில் தலைமை செயலகம் வந்தார் CM

தினந்தோறும் தலைமைச் செயலகத்துக்கு கோட்- சூட் அணிந்து காலை 9 மணிக்கு அலுவலகத்திற்கு வந்து பணிகளை மேற்கொண்டு மாலை தான் இல்லத்திற்கு திரும்புகிறார்.
பட்டு வேட்டி, சட்டையில் தலைமை செயலகம் வந்தார் CM
Published on

2026-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி தமிழகம், இந்தியா மட்டுமின்றி நாடே காத்திருந்தது. இதற்கு காரணம் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய். இவர் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து அரசியலில் அடி எடுத்து வைத்தார். அவர் சந்தித்த முதல் தேர்தலில் மிகப்பெரிய முடிவு மக்கள் அளித்தனர். தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய விழிப்புணர்வை தாண்டி விஜய்க்காக மக்கள் அலைஅலையாய் திரண்டு வந்து வாக்களித்தனர். இதற்காக தேர்தல் பிரசாரத்தின் போது விஜய் அணிந்திருந்த Dress Code-ஐ பயன்படுத்தி அவருக்கு ஆதரவளித்தனர்.

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் தேர்தல் பிரசாரத்தின் போது அணிந்திருந்த Dress Code-ஐ தொடர்ந்து பதவியேற்பு விழாவில் எந்த மாதிரியான Dress Code-ஐ பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, அரசியல் வரலாற்றிலேயே எந்த முதலமைச்சரும் இதுவரை அணிந்திராத கோட்-சூட் அணிந்து முதலமைச்சராக பதவியேற்றார். இதனை தொடர்ந்து தினந்தோறும் தலைமைச் செயலகத்துக்கு கோட்- சூட் அணிந்து காலை 9 மணிக்கு அலுவலகத்திற்கு வந்து பணிகளை மேற்கொண்டு மாலை தான் இல்லத்திற்கு திரும்புகிறார்.

முதலமைச்சர் விஜயின் ஒவ்வொரு செயல்பாடும் அரசியல் விமர்சகர்களால் உற்றுநோக்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று பட்டு வேட்டி-சட்டையில் முதலமைச்சர் விஜய் தலைமை செயலகத்திற்கு வந்து பணிகளை மேற்கொண்டுள்ளார். தனது முகாம் அலுவலகத்திற்கு அருகில் நடைபெற்ற புதுமனை புது விழாவில் கலந்து கொண்ட பிறகு தலைமைச் செயலகம் வந்துள்ளார் முதலமைச்சர்.

முதலமைச்சர் விஜய், பட்டு வேட்டி-சட்டையில் தலைமை செயலகத்திற்கு வந்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com