சில்லறை இல்லையா? MTC-யில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அமலுக்கு வந்தது

சில்லறை இல்லையா? MTC-யில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அமலுக்கு வந்தது

நடத்துநர்களுக்கு மின்னணு இயந்திரத்தை அமைச்சர்கள் வழங்கினர். புதிய முறை ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது.
Published on

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 50 புதிய பேருந்து சேவைகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று (பிப்ரவரி 28) துவங்கி வைத்தனர்.

மேலும் சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் வசதிக்காக யு.பி.ஐ. மற்றும் கார்டுகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அமலுக்கு வந்துள்ளது. இதற்காக நடத்துநர்களுக்கு மின்னணு இயந்திரத்தை அமைச்சர்கள் நேற்று வழங்கினர்.

யு.பி.ஐ. முறையை பயன்படுத்தி சென்னை மாநகர பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளும் வகையில், புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் காரணமாக பயணிகள் பயணச்சீட்டு பெறுவதற்கு யு.பி.ஐ. மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம்.

இன்று முதல் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அனைத்து பேருந்துகளிலும் இந்த வசதி நடைமுறைக்கு வரவுள்ளது. இதனை சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com