காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும்.
காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை:

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், இன்று காலை 10 மணிவரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com