சமையல் எரிவாயு தட்டுப்பாட்டில் எந்த முயற்சியும் மத்திய அரசு எடுக்கவில்லை- அன்பில் மகேஷ்

மக்கள் தயாராக இருக்க வேண்டுமென பிரதமர் பீதியை கிளப்புகிறார்.
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டில் எந்த முயற்சியும் மத்திய அரசு எடுக்கவில்லை- அன்பில் மகேஷ்
Published on

மாநிலங்களை அரவணைத்து அவர்களின் தேவைகளை அறிந்து உணர்ந்து செயல்படுவதில் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளது என அன்பில் மமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

சர்வதேச அளவில் வெளியுறவு கொள்கைளிலும் பாஜக தோல்வியை நோக்கி செல்கிறது என விமர்சனங்கள் எழுகிறது.

தெற்காசிய போரால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து பாஜக அரசு சரியாக கையாள்கிறதா என கேள்வி எழுகிறது.

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டில் எந்த முயற்சியும் மத்திய அரசு எடுக்கவில்லை.

மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், மக்கள் தயாராக இருக்க வேண்டுமென பிரதமர் பீதியை கிளப்புகிறார்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com