

தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சாலை அமைத்ததில் முறைகேடு நடந்த புகாரில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
4 இடங்களில் சாலை அமைக்காமலே கட்டணத்தை அளித்துள்ளதாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, கண்ணன், பூபாலன், பெரியசாமி, சத்தியபாமா உள்ளிட்ட 11 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.