என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜனநாயகனுக்காக 108 சிதறு தேங்காய் உடைத்து வழிபட்ட புஸ்சி ஆனந்த்
- வழக்கில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பை இன்று காலை 10.30 வெளியாகும் என அறிவித்து இருந்தனர்.
- பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கலையொட்டி இன்று உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பை இன்று காலை 10.30 வெளியாகும் என அறிவித்து இருந்தனர். இதனால் 'ஜன நாயகன்' பட வெளியீட்டை ஒத்திவைப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருந்தது. இதனால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில், விஜயின் 'ஜன நாயகன்' படம் எவ்வித சிக்கலும் இல்லாமல் வெளியாக வேண்டி பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். த.வெ.க. நிர்வாகிகளுடன் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்ட புஸ்சி ஆனந்த் 108 சிதறு தேங்காய்களை உடைத்து வழிபட்டார்.






