விழுப்புரத்தில் பா.ஜனதா சார்பில் பூத் வலிமை இயக்க சந்திப்பு கூட்டம்- மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமைதாங்கி கருத்துரை வழங்கினார்.அண்ணாமலை மயிலத்தில் உள்ள முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
மயிலம் முருகன் கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம் செய்த காட்சி.
மயிலம் முருகன் கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம் செய்த காட்சி.
Published on

விழுப்புரம்:

தமிழகம் முழுவதும் பா.ஜனதா சார்பில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பூத் வலிமை இயக்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

அதுபோல் விழுப்புரம் தெற்கு வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் விழுப்புரம்-சென்னை திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமைதாங்கி கருத்துரை வழங்கினார்.

கூட்டத்திற்கு சக்தி கேந்திரா தேசிய பொதுச் செயலாளர் தருண்சுக் சிறப்புரை ஆற்றினார். மாநில பா.ஜனதா துணைத் தலைவர் ஏ.ஜி. சம்பத், பூத் வலிமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, மாநிலபெருங்கோட்ட பார்வையாளர் வினேஜ் பி செல்வம், மாநில கோட்ட பொதுச் செயலாளர் மீனாட்சி நித்தியாசுந்தர் வலிமை பார்வையாளர் தனஜெயன் பிரச்சார பிரிவுதுணைத் தலைவர் விநாயக மூர்த்தி, விழுப்புரம்தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.ஏ.டி., கலிவரதன்,விழுப்புரம் வடக்கு மாவட்டபா.ஜனதா தலைவர் ஏ. டி .ராஜேந்திரன், விழுப்புரம் வடக்கு ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் எஸ். சரவணன், மாவட்டத் துணைத் தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட செயலாளர் சங்கர் மற்றும் சக்தி கேந்திரா நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக மாநில தலைவர் அண்ணாமலை மயிலத்தில் உள்ள முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com