மெரினாவில் கடல் அலையில் சிக்கி மாயமான சிறுவன் உடல் மீட்பு

மெரினா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையில் மீட்பு குழு மாணவரை தீவிரமாக தேடியது.
Marina Beach
Published on

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவருடைய மூத்த மகன் சுதர்சன் (16). பிளஸ்-1 மாணவரான இவர், கடந்த 22-ந்தேதி மெரினா கண்ணகி சிலை பின்புறம் கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி மாயமானார். மெரினா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையில் மீட்பு குழு மாணவரை தீவிரமாக தேடியது.

கடலோர காவல் படையினரும் போலீசாருடன் இணைந்து சுதர்சனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மெரினா கடலில் மாயமான சுதர்சனின் உடல், நேற்று துறைமுகம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது. போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com