நடிகை கஸ்தூரி கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்

நடிகை கஸ்தூரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பாஜகவின் சுதாகர் ரெட்டி தெலுங்கிலேயே பேசி கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்
Published on

பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய நடிகை கஸ்தூரி,

"300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தபுரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழகர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யார்ங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." எனப் பேசினார்.

நடிகை கஸ்தூரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து நடிகை கஸ்தூரி கூறிய சர்ச்சை கருத்துக்கு தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் சுதாகர் ரெட்டி தெலுங்கிலேயே பேசி கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது கருத்தை கஸ்தூரி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com