TN Elections 2026: சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசி ஆதரவு

உங்களின் ஆதரவால் மீண்டும் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நம்புகிறோம்.
TN Elections 2026: சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசி ஆதரவு
Published on

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர், ''வணக்கம், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி சார்பில் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். இந்த வீடியோ மூலம் நான் மரியாதைக்குரிய தமிழ்நாடு வாக்காளர்கள் ஏப்ரல் 23-ஆம் தேதி நடக்கும் தேர்தலில் தங்களின் வாக்குகளை மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணிக்கு செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

உங்களின் ஆசீர்வாதம் மற்றும் ஆதரவால் மீண்டும் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம். எங்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஏற்கனவே மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.

மீண்டும் ஒருமுறை கோரிக்கை வைக்கிறேன். ஏப்ரல் 23-ஆம் தேதி நடக்கும் தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். நல்வாழ்த்துகள். நன்றி,'' என கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com