வேறு வாலிபரை காதலித்ததால் ஆத்திரம் மனைவியை காரை ஏற்றி கொல்ல முயன்ற கணவர் கைது

ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.நந்தினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மனைவியை கார் ஏற்றி கொல்ல முயன்ற கணவர் பிரதீப்குமாரை கைது செய்தனர்.
வேறு வாலிபரை காதலித்ததால் ஆத்திரம் மனைவியை காரை ஏற்றி கொல்ல முயன்ற கணவர் கைது
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூரைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் (வயது 28). இவரும் வீரலப்பட்டியைச் சேர்ந்த நந்தினி (26) என்பவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

நந்தினி ஒட்டன்சத்திரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே திருமணமான 2 மாதத்திலேயே கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் நந்தினி கணவரை விட்டு பிரிந்து வீரலப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் பிரதீப்குமார் தனது மனைவியை வீட்டுக்கு வருமாறு பல முறை அழைத்தும் வரவில்லை. இது குறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நந்தினி தனது அலுவலகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளரான அசோக்குமார் (29) என்பவரை காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இருவரும் ஒன்றாகவே பைக்கில் ஊர் சுற்றி வந்துள்ளனர்.

இதன் காரணமாகத்தான் தனது மனைவி பிரிந்து சென்று விட்டார் என பிரதீப் குமார் சந்தேகமடைந்தார். இந்நிலையில் கள்ளிமந்தயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு நந்தினி தனது காதலன் அசோக்குமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

இதை பார்த்ததும் பிரதீப்குமார் கோபமடைந்தார். தான் ஓட்டி வந்த காரை அவர்கள் மீது மோத விட்டு கீழே தள்ளினார். இதில் நந்தினி மற்றும் அசோக்குமார் படுகாயமடைந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து நந்தினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மனைவியை கார் ஏற்றி கொல்ல முயன்ற கணவர் பிரதீப்குமாரை கைது செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com