தேர்தல் நேரம் என்பதற்காக பொதுமக்களை ஆபத்தில் விட்டுவிடக் கூடாது- அண்ணாமலை

இன்னும் சிறுத்தை பிடிக்கப்படாமல் இருப்பது, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தல் நேரம் என்பதற்காக பொதுமக்களை ஆபத்தில் விட்டுவிடக் கூடாது- அண்ணாமலை
Published on

சென்னை:

பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவிட்டுள்ளதாவது:-

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிப்பாளையம் கக்குராயன் மலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிய வந்துள்ளது. வனத்துறையும், கிராம மக்களும், சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்து, கிட்டத்தட்ட ஒரு வார காலம் கடந்து விட்டது. ஆனால், இன்னும் சிறுத்தை பிடிக்கப்படாமல் இருப்பது, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேர்தல் நேரம் என்பதற்காக, பொதுமக்களை ஆபத்தில் விட்டுவிடக் கூடாது. இந்த பிரச்சனைக்கு உடனடி கவனம் செலுத்த வேண்டும். தமிழக வனத்துறை, உடனடியாக விஞ்ஞானபூர்வமான தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, பாதுகாப்பு வலை அமைத்து, சிறுத்தையைப் பிடித்து, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com