பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை?- ஜூன் 4-ல் புதிய கட்சி தொடக்கம்?

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை, 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் தனது 37-வது வயதில் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
அண்ணாமலை
Published on

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்து மீண்டும் இணைவு, எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா என பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இதனிடையே, தமிழக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய கட்சி குறித்த அறிவிப்பை அண்ணாமலை தனது பிறந்தநாளான வருகிற 4-ந்தேதி அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், தனது முடிவு குறித்து அறிவிக்க பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபினை சந்திக்க இன்று அல்லது நாளை டெல்லி செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது தொடர்பான தகவல்கள் சட்டசபை தேர்தலுக்கு முன்பே பரவி வந்தன. அதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் கட்சிப் பெயர்கள், கொடி வடிவமைப்பு குறித்து ஆலோசனை வழங்கி வந்தனர். இதனிடையே ஜூன் மாத தொடக்கத்திலேயே ஓர் அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டு வந்தது.

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை, 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் தனது 37-வது வயதில் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழக பா.ஜ.க. வை வழிநடத்திய இளம் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். அதனை தொடர்ந்து 2025-ம் ஆண்டு அவர் அப்பதவியில் நீடித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com