

பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றதாக பொதுச்செயலாளர் அர்ஜூன் சிங் அறிவித்துள்ளார். மேலும் பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகும் அண்ணாமலையின் முடிவும் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை சமூக வலைதளம் மூலம் நேரலையில் மக்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:
* நான் தொடங்கும் கட்சியில் யாருக்கும் எந்த நாற்காலியும் நிரந்தரமல்ல.
* தனது கட்சியில் இணைவதற்கான இணைய லிங்கையும் அவர் அறிவித்தார்.
* தனிநபர் துதி பாடும் அரசியலை விரும்பாததால் தான் நேற்று என் பிறந்தநாளில் நான் எதையும் பேசவில்லை.
* நிரந்தர அமைச்சர், எம்எல்ஏ என இல்லாமல் அனைவருக்கும் வாய்ப்பு தரும் வகையில் அமைய வேண்டும் என நினைக்கிறேன்.
* எனது இயக்கத்தில் சேர Be the Leader-ல் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.
* www.wetheleader.org என்ற இணையத்தின் மூலம் கட்சியில் இணையலாம்.
* பயிற்சி பெற்ற பின்னரே தேர்தலை சந்திக்கும் வகையில் வேட்பாளர்களை வடிவமைக்க வேண்டும்.
* ஒரு முதல்வரோ, அமைச்சர்களோ, எம்எல்ஏக்களால் மாற்றம் கொண்டு வர முடியாது. உள்ளாட்சி பிரதிநிதிகளால் சாத்தியம்.
இவ்வாறு அவர் கூறினார்.