பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா சிவாவிற்கு மீண்டும் பதவி- அண்ணாமலை அறிவிப்பு

தொலைபேசியில் ஆபாசமாக திட்டி திருச்சி சூர்யா சிவா பேசிய ஆடியோ வைரலானது.சூர்யா சிவாவை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி பாஜக அறிவித்தது.
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா சிவாவிற்கு மீண்டும் பதவி- அண்ணாமலை அறிவிப்பு
Published on

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓ.பி.சி. அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று பொதுவெளியில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தொலைபேசியில் ஆபாசமாக திட்டி திருச்சி சூர்யா சிவா பேசிய ஆடியோ வைரலானது.

இந்த விவகாரம் தொடர்பாக, டெய்சி சரண், சூர்யா சிவா ஆகியோரிடம் திருப்பூரில் வைத்து பா.ஜ.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து, சூர்யா சிவாவை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி பாஜக அறிவித்தது.

இந்நிலையில், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா சிவாவிற்கு கட்சியில் மீண்டும் பதவி வழங்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

மேலும், தான் வகித்து வந்த பதவியில் மீண்டும தொடரவும் திருச்சி சூர்யா சிவாவுக்கு அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com