எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து அன்புமணி-டி.டி.வி. தினகரன் டெல்லி பயணம்

டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை திரும்பினார்.
அன்புமணி-டி.டி.வி தினகரன்
அன்புமணி-டி.டி.வி தினகரன்
Published on

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தயாராகி வருகிறது.

அன்புமணி-டி.டி.வி. தினகரன்

அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற் றுள்ள கட்சிகளுக்குஎத்தனை தொகுதி களை ஒதுக்கலாம் என்பது பற்றியும், பாரதீய ஜனதா கட்சி போட்டியிட இருக்கும் தொகுதிகள் குறித்தும் இருவரும் விவாதித்துள்ளனர்.

டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை திரும்பினார்.

அமித்ஷாவை சந்தித்த பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் 4 நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிச் செய்யப்படும் என்கிற தகவலையும் வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பா.ம.க. தலைவர் அன்புமணி, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 17 தொகுதிகளும், அ.ம.மு.க.வுக்கு 9 தொகுதிகளையும் ஒதுக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பான பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் வகையிலேயே அன்புமணியும், டி.டி.வி. தினகரனும் டெல்லி சென்று இருப்பதாக கூறப்படுகிறது.

டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க தலைவர்களை இருவரும் தனித்தனியாக சந்தித்து பேச இருக்கிறார்கள்.

இந்த சந்திப்பின்போது சட்டமன்ற தேர்தல் மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக இருவரும் தீவிர ஆலோசனையை மேற்கொள்ள உள்ளனர். இதன் முடிவில் பா.ம.க.வு-க்கும், அ.ம.மு.க.-வுக்கும் எத்தனை தொகுதிகள் என்பது இறுதிச் செய்யப்பட இருக்கிறது.

தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் நாளை சென்னை வருகை தர உள்ளார். அதற்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை டெல்லியில் இறுதி செய்வதற்கு பாரதீய ஜனதா தலைமை திட்டமிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் சில தினங்களில் இறுதி செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இதன் பின்னர் அ.தி.மு.க, பா.ஜ.க. தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க தலைவர்கள் தமிழகத்தில் தனித்தனியாகவும் கூட்டாகவும் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com