தொடக்க விழாவுக்காக 300 பஸ்களை சென்னைக்கு வரவழைத்து காத்திருக்க வைப்பதா? - அன்புமணி கண்டனம்

தேவையில்லாமல் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பஸ்கள் அனைத்தையும் உடனடியாக திரும்பிச் செல்ல ஆணையிட வேண்டும்.
Anbumani Ramadoss
Published on

பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்கவிழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை கொண்டு வரப்பட்ட 300 அரசுப் பஸ்கள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் 3-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் தேவையின்றி பஸ்களை இயக்கி எரி பொருளை வீணாக்குவது கண்டிக்கத்தக்கது.

கடந்த காலங்களில் புதிய பஸ்கள் தொடங்கி வைக்கப்படும்போது சில மண்டலங்களில் இருந்து மட்டும் பெயரளவுக்கு வரவழைத்து விழாவை நடத்துவது தான் வழக்கம். இப்போது 300 பஸ்களை தேவையின்றி சென்னைக்கு வரவழைத்தி ருக்கக்கூடாது.

இவை அனைத்தும் முதலமைச்சர் விஜய்க்கு தெரிந்து நடக்கிறதா? இல்லை அவருக்கு தெரியாமல் நடக்கிறதா? என்பது தெரியவில்லை. தேவையில்லாமல் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பஸ்கள் அனைத்தையும் உடனடியாக திரும்பிச் செல்ல ஆணையிட வேண்டும். புதிய பஸ்களை தேவையில்லாமல் சென்னைக்கு அழைத்து வர அறிவுறுத்திய அதிகாரிகள் யாராக இருந்தால் அவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com