

சேலத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுக்க வேண்டும்.
* மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுக்காவிடில் தமிழ்நாடு மிகப்பெரிய பிரச்சனைகளை சந்திக்கும்.
* மேகதாது அணை கட்டினால் மேட்டூர் அணையை விட கர்நாடக அணை கொள்ளளவு இருமடங்காக உயரும்.
* மேகதாது விவகாரத்தில் கர்நாடகா பிடிவாதமாக இருக்கிறது. கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தொடர்ந்து பொய் கூறி வருகிறார்.
* நீதிமன்றங்களால் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும் கர்நாடகா பிடிவாதம் பிடிக்கிறது.
* கடந்த காலங்களில் உச்சநீதிமன்ற தீர்ப்பு, காவிரி ஆணைய உத்தரவு எதையும் கர்நாடகா மதிக்கவில்லை.
* மேகதாது பகுதியில் அணை கட்டினால் அரியவகை விலங்குகள், மரங்கள் அழிந்துவிடும்.
* மேகதாது நடுவர் நீதிமன்றம் அமைக்கும் தீர்மானம் தவறாது, மேகதாதுவை ஏற்காதபோது நடுவர் நீதிமன்றம் ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.