‘இந்திய அளவில் இல்லாத வகையில் பல ஆண்டுகளாக தொடரும் கூட்டணி’ - தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கூட்டணி கட்சி தலைவர்களுக்கு இன்று தேநீர் விருந்து அளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
‘இந்திய அளவில் இல்லாத வகையில் பல ஆண்டுகளாக தொடரும் கூட்டணி’ - தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Published on

2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.

கூட்டணியில் இடம்பெற்றுள்ள 26 கட்சிகளுக்கிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், தேர்தல் பிரச்சார யுக்திகள் மற்றும் பணிகள் குறித்து ஆலோசிக்கவும் இந்த விருந்து அளிக்கப்பட்டது.

இதில் காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஎம் மாநிலத்தலைவர் பெ.சண்முகம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ முபாரக், மஜகவின் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த விருந்து விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,

“கூட்டணிக் கட்சிகளின் தலைவர் என்ற முறையில் அனைவரையும் வரவேற்கிறேன். நாம் அமைத்துள்ள இந்தக் கூட்டணி புதிதான கூட்டணி அல்ல. ஏற்கனவே சட்டமன்றம், நாடாளுமன்றம், இடைத்தேர்தல் என தொடர்ந்து இந்திய அளவில் இல்லாத வகையில் இவ்வளவு ஆண்டுகளாக தொடரும் கூட்டணி.

இக்கூட்டணியில் இன்னும் சில கூட்டணிகள் இணைந்துள்ளன. உடன் நின்று உறுதியாகப் பயணிக்கும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com