

சென்னை:
அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.ஏ.) அ.ம.மு.க. கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சைதாப்பேட்டை, பூந்தமல்லி, மடத்துக்குளம், பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர், நாங்குநேரி, ஒட்டப்பிடராம், திருச்சி மேற்கு ஆகிய 11 தொகுதிகளில் அ.ம.மு.க. போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிட உள்ள அ.ம.மு.க. வேட்பாளர்கள் யார்- யார்? என்பதை கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்வு செய்துள்ளார்.
ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்கள் யார்-யார்? என்ற பட்டியலை டி.டி.வி.தினகரன் நாளை காலை 10 மணிக்கு வெளியிட உள்ளார்.
அப்போது அ.ம.மு.க.வின் தேர்தல் அறிக்கையையும் அவர் கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்கள் முன்னிலையில் வெளியிடுகிறார்.