பா.ஜ.க.வில் இருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி

அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.
amar prasad reddy
Published on

தமிழக சட்டசபை தேர்தல் முடிந்ததும் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகினார். அவர் தனி இயக்கத்தைத் தொடங்கும் திட்டத்தை அறிவித்தார்

கடந்த வாரம் "வி தி லீடர்ஸ்" என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கினார். இந்த இயக்கத்தில் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.

இதற்கிடையே, தமிழக பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகளும் அண்ணாமலை இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க. மாநிலச் செயலாளரும், அண்ணாமலையின் நெருங்கிய ஆதரவாளருமான அமர் பிரசாத் ரெட்டி, பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிறப்பால் நான் தெலுங்கர் என்றாலும், தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவேன். விரைவில் அண்ணாமலை இயக்கத்தில் இணையவுள்ளேன். எதிர்காலத்தில் அண்ணாமலைக்கும் விஜய்க்கும் இடையில்தான் அரசியல் போட்டி இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com