

சென்னையில் வருகிற 27-ந்தேதி ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வைகோ தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதா? இல்லை வெளியேறுவதா என்பது குறித்து வைகோ தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
ம.தி.மு.க.வி.னர் பெரும்பாலானோர் த.வெ.க.வுடன் கூட்டணி வைப்பதற்கு வைகோவிடம் வலியுறுத்திய நிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு த.வெ.க. தலைமையிலான அரசு ஆட்சி அமைத்துள்ளது. விஜய் தலைமையிலான அரசு ஆட்சி அமைப்பதற்கு தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி கட்சிகள் மற்றும் ஐ.யு.எம்.எல் ஆகியவை ஆதரவு அளித்தன.
இதனை தொடர்ந்து முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.