

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.
கடந்தாண்டு மாவட்டச் செயலாளர் பதவி மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து முறையிட விஜய்யைச் சந்திக்க முயன்று மக்களிடையே கவனம் ஈர்த்தார். இவரை விஜய் சந்திக்காததும் பெரும் பேசுபொருளானது. பொறுப்பு வழங்கப்படாவிடினும் கட்சிக்காக உழைப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து தற்போது அறிவிக்கப்பட்ட தவெக வேட்பாளர் பட்டியலிலும் இவர்பெயர் இடம்பெறவில்லை. இதனால் மனமுடைந்த அஜிதா திமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. தவெக தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக சாமுவேல் ராஜ் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.