இரவல் சக்தியால் கோட்டையில் ஒட்டிக்கொண்டிருக்கும் வாடகை சக்தி: அதிமுக எம்.பி. இன்பதுரை

திருச்சியில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அதிமுக- திமுக கூட்டணிக்கு முயற்சித்தாக முதல்வர் விஜய் குற்றம்சாட்டினார்.
இரவல் சக்தியால் கோட்டையில் ஒட்டிக்கொண்டிருக்கும் வாடகை சக்தி: அதிமுக எம்.பி. இன்பதுரை
Published on

தமிழக முதலமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் இன்று திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, த.வெ.க. ஆட்சியை அமைவதை தடுக்க அதிமுக மற்றும் திமுக கூட்டு வைக்க முயற்சித்ததாக குற்றம்சாட்டினார். மேலும், மற்றும் சிலர் என அதிமுக-வை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில் அதிமுக மாநிலங்களவை எம்.பி. இன்பதுரை முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது எக்ஸ் பக்க பதிவில் “இரவல் சக்தியால் கோட்டையில் ஒட்டிக்கொண்டிருக்கும் வாடகை சக்தியை வீழ்த்தப் போகும் உண்மையான மக்கள் சக்தி அதிமுக!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com