த.வெ.க.-வில் இணையும் ஆதவ் அர்ஜுனா.. முக்கிய பதவியை கொடுக்கும் விஜய்.. இன்று வெளியாகும் அறிவிப்பு?

ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் தேர்தல் வியூக நிறுவனத்துடன் ஒப்பந்தம்நேற்று முன் தினம் விஜய்யை ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்தார்.
த.வெ.க.-வில் இணையும் ஆதவ் அர்ஜுனா.. முக்கிய பதவியை கொடுக்கும் விஜய்.. இன்று வெளியாகும் அறிவிப்பு?
Published on

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்து 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியானது.

ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் தேர்தல் வியூக நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய த.வெ.க. தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா த.வெ.க.-வில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே நேற்று முன் தினம் விஜயை ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்தார். அப்போது, த.வெ.க.-வில் ஆதவ் அர்ஜுனா இணைவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாகத் தெரிகிறது.

இந்நிலையில் த.வெ.க. கட்சியில் ஆதவ் அர்ஜுனாவிற்கு தேர்தல் சிறப்புப் பிரிவு பதவி வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தலைவர், பொதுச் செயலாளருக்கு அடுத்தபடியாக ஆதவ் அர்ஜுனா இருப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

X

Maalai Malar
www.maalaimalar.com