

தமிழக அரசியலில் களம் இறங்கி முதன் முதலாக தேர்தலை சந்திக்கிறது விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி. இக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. 234 தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை அதன் தலைவர் விஜய் இன்று அறிவித்தார்.
அதன்படி, த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தூத்துக்குடி தொகுதியில் தவெக தலைவர் விஜயின் நண்பர், நடிகர் ஸ்ரீநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர்களை அறிவிக்கும் நிகழ்வில் ஸ்ரீநாத்தை நண்பர் என்று அன்போடு அழைத்து விஜய் அறிமுகம் செய்தார். வேட்டைக்காரன் படத்தில் விஜயுடன் இணைந்து ஸ்ரீநாத் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.