என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    உன் கூடவுமா அரசியல் பன்னனும் - விஜயை கலாய்த்த போஸ் வெங்கட்
    X

    விஜய் - போஸ் வெங்கட்

    உன் கூடவுமா அரசியல் பன்னனும் - விஜயை கலாய்த்த போஸ் வெங்கட்

    • பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு.
    • சூர்யாவை அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறி இருந்தார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் மாநாட்டில் திரண்டனர்.

    மாநாடு நடந்ததையடுத்து பல அரசியல் தலைவர்கள் விஜயையும் அவரது கொள்கைகளையும் விமர்சித்து வருகின்றனர்.

    தற்போது இயக்குனர் மற்றும் நடிகரான போஸ் வெங்கட் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை விமர்சித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்.. என்று பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சூர்யாவின் 'கங்குவா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய போஸ் வெங்கட், சூர்யாவை அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறி இருந்தார்.

    சூர்யாவை அரசியலுக்கு வரச்சொன்ன போஸ் வெங்கட் விஜயை விமர்சித்து கருத்து தெரிவித்து இருப்பது தற்போது பேசு பொருளாகி உள்ளது.

    Next Story
    ×